திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:49 IST)

டிரம்ப் தலைக்கு ரூ.573 கோடி: ஈரான் அரசு விளம்பரம்?

அமெரிக்கா சமீபத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ஈரானின் முக்கிய தளபதி சுலைமான் என்பவரை கொலை செய்த நிலையில் தற்போது அமெரிக்காவை பழிவாங்க ஈரான் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டுவந்தால் 80 மில்லியன் டாலர் சன்மானம் கிடைக்கும் என ஈரான் அரசு சார்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 573 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவின் அதிரடி தாக்குதலால் இதுவரை ஈரானின் 14 முக்கிய தலைவர்கள் பலியாகி உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் அரசு கூறி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்க ஈரான் திட்டமிட்டு வரும் நிலையில் ஈரான் தளபதி சுலைமான் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. இதில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச் சடங்கு முடிவடைந்த பின்னர் ஈரான் அரசு ஊடகம் ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. அந்த விளம்பரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் தலையை கொண்டுவந்தால் 80 மில்லியன் டாலர் சன்மானம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இரான் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இருப்பினும் இந்த விளம்பரம் உண்மையிலேயே ஈரான் அரசு தான் கொடுத்ததா? அல்லது ஈரான் அரசு பெயரில் வேறு யாராவது கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை. இந்த விளம்பரம் குறித்து ஈரான் அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது