வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:21 IST)

லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலம்: ஈரான் தளபதி உடல் அடக்கம்!

அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி உடல் பல லட்சம் மக்கள் கூட்டத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் தீர்மானத்தை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதார தடைகளை ஈரான் மீது விதிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் ஈராக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடல் நேற்றி ஈரானை வந்தடைந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட சுலைமானியின் உடலை கண்டு கதறியழுதுள்ளார். பின்னர் சுலைமானியின் உடல் வாகனத்தில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈரான் – அமெரிக்கா இடையே வெளிப்படையான போர் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.