செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (10:58 IST)

அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து – அதிரடியாக அறிவித்த ஈரான்!

உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணிவம் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் செயல்பட்டு வருகிறது. முதலாவதாக ஈரானில் இருக்கு அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற ஈரான் அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கண்டனங்கள் எழுப்பப்பட்டது.

முன்னர் அணு ஆயுதங்களை அதிகளவில் சோதனை செய்து வந்த ஈரான் வல்லரசு நாடுகளுடன் கொண்ட ஒப்பந்தத்தின் படி ஆயுத உற்பத்தியை குறைத்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் ஒப்பந்ததை ரத்து செய்து கொண்டால் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை வல்லரசு நாடுகள் கட்டுப்படுத்த முடியாது.

ஒப்பந்தத்தை ரத்து செய்யும் ஈரானின் நடவடிக்கையை தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார். இதனால் மற்ற வல்லரசு நாடுகள் போர் ஏற்படும் சூழலை தவிர்க்க இரு நாடுகளையும் சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.