செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (08:39 IST)

ஹிஜாப் அணியாத 61 வயது நடிகைக்கு 2 வருட சிறைத்தண்டனை..! அதிர்ச்சி தகவல்..!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்து உள்ளது
 
பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணியாமல் சென்ற  காரணத்துக்காக ஈரானிலுள்ள நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஹிஜாப் அணியாமல் பொது இடத்தில் வந்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்த நிலையில் நடிகை அஃப்சனாஹ் பாயேகன் என்பவருக்கு 61 வயது ஆகிறது என்றும் அவருக்கு மனநிலை சரியில்லை என்றும்  அவரது உறவினர்கள் வாதாடிய போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை
 
இருப்பினும் சிறையில் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்க மட்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva