1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (08:28 IST)

பாஜக உருவாக்கிய சர்ச்சைக்குரிய சட்டங்கள் வாபஸ் பெறப்படும்: கர்நாடக அரசு..!

பாஜக உருவாக்கிய சர்ச்சைக்குரிய சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் ஹிஜாப் உட்பட ஒரு சில சர்ச்சைக்குரிய சட்டங்களை பாஜக தனது ஆட்சியின்போது இயற்றியுள்ளதாகவும் அந்த சட்டங்கள் தற்போது திரும்ப பெறப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
அமைச்சரவை விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு பாஜக அரசால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டங்கள் திரும்ப பெறுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன
 
குறிப்பாக ஹிஜாப் அணிய தடை, மதமாற்ற தடைச் சட்டம் போன்றவை திரும்ப பெறப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva