வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified புதன், 3 ஆகஸ்ட் 2022 (11:02 IST)

குடிமக்கள் கவனத்துடன் இருங்க… அமெரிக்க வெளியுறவு துறை!

தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.


அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்த்தது என்பதும் அதற்கு பதிலடியாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உறுதிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அமெரிக்க வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகம் எங்கும் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அல்-கொய்தா அல்லது அதுசார்ந்த தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க அலுவலகங்கள், அதிகாரிகளை குறிவைக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.