வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (16:20 IST)

''இதயம் இதயம் துடிக்கின்றதே'' -ஏ.ஆர்.ரஹ்மான் தீபாவளி வாழ்த்து

பிரதமர் மோடி , கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியை டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ரிடுவீட் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மக்கள் சிறப்பாக கொண்டாடுவர்.

அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றர். இ ந்த  நிலையில்  நமது பிரதமர் மோடி இன்று  கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்,.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா முதலில் போரை விரும்புவதில்லை. அமைதியை விரும்புகின்ற நாடு என்று தெரிவித்துள்ளார்.

இந்திர ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது தேசிய பாடல்களையும் ரசித்தார்.

இதுகுறித்து, அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ரிடுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம் ‘’ என்று தனது வந்தே மாதரம் இசை ஆல்பத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார், இது வைரலாகி வருகிறது.

Edited by Sinoj