செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:39 IST)

தாலிபன்களுக்கு எதிராக பெண் கல்விக்காக போராடுவோம்… ஆசிரியர்கள் உறுதி!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்களை பழைய மாதிரி படிக்க விட மாட்டார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் சொன்ன அளவுக்கான மக்களை இன்னும் வெளியேற்றவில்லை. இதனால் அமெரிக்க படைகள் வெளியேறுவதில் கால நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ளார்

இந்நிலையொல் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆப்கனை விட்டு செல்வதை தாலிபன்கள் விரும்பவில்லை. நாட்டின் உள்மறுகட்டமைப்புக்கு அவர்கள் தேவை. அதெ போல ஆசிரியர்களும் தேவை. இந்நிலையில் பெண்களுக்கு பழைய மாதிரி கல்வி கிடைக்க விடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் ‘தாலிபன்கள் பெண் கல்விக்கு எதிராக செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக போராடுவோம். எங்கள் முடிவில் உறுதியாக இருப்போம் ‘ என்ற முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.