திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (15:28 IST)

இந்தியாவில் இனி டிக்டாக் இல்லை. அனைத்து பணியாளர்களும் நீக்கம்!

tiktok
இந்தியாவில் டிக்டாக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இனி டிக் டாக் மீண்டும் தொடங்குவதாக எண்ணம் இல்லை என்று கூறிய டிக் டாக் நிறுவனம் இந்தியாவில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. 
 
டிக் டாக் செயலி இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென இந்தியாவில் டிக் டாக் செயலி தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயல்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
 
சீனாவை சேர்ந்த டிக் டாக் நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள அதன் அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலியை செயல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran