திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 26 பிப்ரவரி 2022 (15:22 IST)

உக்ரைனில் இருந்து மும்பை புறப்பட்ட 219 இந்திய மாணவர்கள்!

உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். 
 
அவர்களை பத்திரமாக நாடு திருப்பும் பணியில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் புக்கரஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்களுடன் முதல் விமானம் மும்பை புறப்பட்டது. இந்த விமானம் 219 பயணிகளுடன் இரவு 9 மணிக்கு ஏர் இந்திய விமானம் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர். பின்னர் மாணவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி, மும்பை திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.