1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (09:34 IST)

நானும் என் குடும்பமும்தான் ரஷ்யாவின் முதல் இலக்கு… உக்ரைன் அதிபர் பேச்சு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் 3 நாட்களைக் கடந்து இப்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘ரஷ்யாவின் முதல் இலக்கு நானும் என் குடும்பமும்தான். அவர்கள் எங்களை கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். எங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை. உலக நாடுகள் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.