சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த கூலிப்படையா? மேலும் ஒருவர் கைது..!
சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்த கூலிப்படை ஏவபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கியை கொடுத்தது யார்? கூலிப்படையை அமர்த்தியது யார்? எவ்வளவு ரூபாய் பணம் கை மாறி உள்ளது? போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு நான்கு லட்சம் பேசப்பட்டு முன் பணமாக ஒரு லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சல்மான் கான் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva