வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (14:30 IST)

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்.. ஒரு வாரமாக தேடும் காவல்துறை..!

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதை அடுத்து ஒரு வாரமாக போலீசார் அவரை தேடி வருவதாகவும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் அவ்வப்போது இந்திய மாணவ மாணவிகள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது நடந்து வரும் நிலையில் சிகாகோவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் உயர்கல்வி படிப்பதற்காக சென்ற ரூபேஷ் என்ற இந்திய மாணவரை காணவில்லை.
 
இவர் காணாமல் போனதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கடந்த ஒரு வாரமாக போலீசார் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ரூபேஷை   யாராவது பார்த்தால் தகவல் கொடுக்கும்படி பொதுமக்களுக்கு சிகாகோ காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் ஒரு வாரமாக இந்திய மாணவர் கண்டுபிடிக்கப்படாதது குறித்து  அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது. இருப்பினும் மாணவரை விரைவில் கண்டுபிடித்து ஒப்படைப்போம் என சிகாகோ காவல்துறை நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran