1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 மே 2024 (16:48 IST)

விடுதலை டி ஏஜிங் பணிகளுக்காக அமெரிக்கா செல்லும் வெற்றிமாறன்!

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இளமையான தோற்றத்தில் கொண்டுவர உள்ளாராம் வெற்றிமாறன். இதுவரை எடுத்த விஜய் சேதுபதியின் காட்சிகளை எல்லாம் டி ஏஜ் செய்ய அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளாராம் வெற்றிமாறன். அதெல்லாம் முடிந்தவுடன்தான் விடுதலை 2 திரைப்படம் இந்த ஆண்டு கடைசியில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.