செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:49 IST)

கனடா செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை

Canada
கனடாவிற்கு மேல்படிப்பு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக் வெளியுறவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பை பறித்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் எண்ணுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்கள் எல்லோரையும் வெளியேற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கனடா செல்லும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது 
 
கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் வெளியுறவுத்துறை இந்த எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது