திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (15:11 IST)

முன்னாள் உலக அழகியுடன் த்ரிஷா எடுத்த செல்ஃபி வைரல் !

thrisha
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பொரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் காட்சி நேற்று பெங்களூரில் வெளியானது.

எப்போது,இந்தப் பிரமாண்ட படம் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள் தம் சமூக வலைதளப் பக்கத்தில், இப்பட அனுபவம், மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

aiswarya rai -thrisha

இந்த நிலையில், பொன்னியின் செல்வன்- பட ஷூட்டிங் ஸ்பாட்டில்,  குந்தையாக நடித்துள்ள த்ரிஷாவும், நந்தினியாக நடித்துள்ள முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாவும் எடுத்துக் கொண்ட செஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.