தொடர்புடைய செய்திகள்
- IPL போட்டிகளுக்கான டிக்கெட்..வெளியான முக்கிய தகவல்
- தோனி ரிட்டையர் ஆனதும் ரோஹித் சி எஸ் கே அணியை வழிநடத்தனும்… முன்னாள் வீரரின் ஆசை!
- ரிஷப் பண்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய என்சிஏ… ஐபிஎல் தொடரில் ரி எண்ட்ரி!
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அஜித்… மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல்!
- CSK அணியின் கேப்டன் தோனிக்கு மொயின் அலி புகழாரம்!
ரிஷப் பண்ட் இந்தியாவின் சொத்து… டி 20 உலகக் கோப்பையில் அவர் இடம்பெறுவாரா?- ஜெய் ஷா அளித்த பதில்!
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதனால் அவர் ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தீவிரப் பயிற்சிக்கு பிறகு இப்போது அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “தற்போது ரிஷப் பண்ட் சிறப்பாக பேட் செய்கிறார். உலகக் கோப்பை டி 20 தொடரில் அவர் இடம்பெற்றால் இந்திய அணிக்கு சிறப்பான அம்சமாகும். அவர் இந்திய அணியின் சொத்து. ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.