திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:04 IST)

இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் நாடு திரும்பலாம்: அமெரிக்கா அறிவிப்பு

இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் நாடு திரும்பலாம்: அமெரிக்கா அறிவிப்பு
இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களில் பணி செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் குடும்பத்தினருடன் நாடு திரும்ப விரும்பினால் தாராளமாக திரும்பலாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருவதை அடுத்து அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் நாடு திரும்ப விரும்பினால் உடனடியாக திரும்பலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது
 
ஆனாலும் இது தூதரக அதிகாரிகளின் விருப்பம் என்றும் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது