1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (11:59 IST)

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது: தூதரகம் திட்டவட்டம்!

srilanka
இலங்கையில் நடைபெறும் வன்முறையை ஒடுக்குவதற்காக இந்தியா தனது படைகளை அனுப்பாது என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக கூறியுள்ளது 
இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத அளவில் இலங்கை அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை ராணுவம் திணறி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என இலங்கை ராணுவம் மற்றும் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்பாது என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக கூறியுள்ளது
 
இலங்கையில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த இந்திய படைகளை அனுப்ப உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை அடுத்தே இந்த விளக்கத்தை இந்திய தூதரகம் அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது