இலங்கையில் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
இலங்கையில் சில மாதங்களாகப் பொருளாதார நெருக்கடி உள்ளதால்,பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராகப் பதவி ஏற்றார்.
இந்த நிலையில், இலங்கைக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிஉதவி செய்தன.
ஆனால், இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தப ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில், இன்று காலை முதல் மக்கள் கொழும்புவில் குழுமியுள்ளனர். மேலும், அதிகபர் கோத்தபய ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையுள்ளனர். அவர்களைக் கலைக்கும் விதமாக போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.