திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2025 (10:06 IST)

பணத்தாசை காட்டி மயக்கி 30 பெண்களோடு உல்லாசம்! வீடியோ எடுத்து ஷேர் செய்த மெடிக்கல் உரிமையாளர்!

mobile

கர்நாடகாவில் மெடிக்கல் கடை நடத்தி வந்த நபர் பல பெண்களுக்கு பண ஆசை காட்டி உல்லாசமாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் உள்ள சென்னகிரி டவுன் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருபவர் அம்ஜத். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மருந்துக்கடைக்கு மருந்து வாங்க வரும் பெண்களிடம் பேச்சுக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்த அம்ஜத், அவர்களது பலவீனத்தை அறிந்து பல சமயங்களில் பண உதவி செய்து அவர்களை கவர்ந்துள்ளார்.

 

பின்னர் மேலும் பணம் தருவதாக ஆசைக்காட்டி அவர்களை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அவ்வாறு அவர்களை தனக்கு சொந்தமான தனி வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவும் எடுத்துள்ளார் அம்ஜத். அதன் பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டி வந்த அவர், தான் விரும்பும்போதெல்லாம் தன்னுடன் வந்து உறவுக் கொள்ள வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தி வன்கொடுமையும் செய்துள்ளார்.

 

இதுகுறித்து சில பெண்கள் அளித்த புகாரின் பேசில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 30 பெண்களை இவ்வாறு அம்ஜத் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து போலீஸார் அம்ஜத்தை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அதில் இருந்த சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் ஆக தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வீடியோக்களை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும், அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Edit by Prasanth.K