புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (14:48 IST)

பிரபாகரன் காலத்தில் மக்கள் பயமின்றி வாழ்ந்தனர் - ராஜபக்சே

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்,இலங்கை தேசத்தில்  விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே பெரும் போர் மூண்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அப்போதைய அதிபராக இருந்தவர்  ராஜபக்‌ஷே.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் மக்கள் பயமின்றி வாழ்ந்தனர் என இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்தார்.
 
சமீபத்தில் கொழும்புவில் உள்ள தேவாயலங்கள் , ஹோட்டலில் குண்டுகள் வெடித்ததில் மக்கள் பலர் பலியாகினர். இந்நிலையில் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்‌ஷே ; கோயில்கள் , பள்லிவாசல், தேவாலங்கள் போன்ற இடங்களில்  பயமின்றி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
மேலும் தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் கூட மக்களிடன் இந்த அளவுகு பயம் இருந்தில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆளும் தற்போதைய அரசாங்கத்திற்கு அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை இல்லை என்றும் தனது தலைமையின் கீழ் அமையும் அரசாங்கத்திற்கு அதற்கான உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.