1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜூலை 2019 (18:28 IST)

அதிமுகவை மக்கள் தோற்கடித்ததற்கான காரணம் இதுதான் ! - ஓ.பி. எஸ் புதுவிளக்கம்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நன்றாக பிரச்சாரம் செய்தும் படுதோல்வியை சந்தித்தது. அதிமுக மட்டும் ஒரே தொகுதியில் வெற்றி பெற்றது.
 இந்நிலையில்  இந்த தோல்வி குறித்து ஓ. பன்னீர் செல்வம்: தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவந்த அதிமுகவுக்கு திருஷ்டி கழிக்கும் விதமாகவே 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள்  அதிமுகவுக்கு தோல்விமுடிவைத்தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.
 
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1 ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்க் கூட்டத்தொடரை ஜூலை 30 ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே துறை ரீதியான விவாதங்கள் சபையில் காரசாரமாக நடைபெற்றுவருகின்றன.
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையின் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதிலளித்து தமிழக துணைமுதல்வர் பேசினார். அதில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்த சாதனையை அதிமுக படைத்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும்  அதிமுக 90 % அதிகமான இடங்களில்  வெற்றிபெற்றது.
 
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுமுதல் பலவெற்றிகளை பெற்றுவந்த அதிமுகவுக்கு திருஷ்டி கழிக்கும் விதமாகவே மக்கள் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்லில் தோல்விமுடிவை வழங்கியுள்ளார்கள். வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.