திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:50 IST)

”உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்”..இம்ரான் கான் எச்சரிக்கை

இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால், போர் வந்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால் இரு நாடுகளும், ராணூவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படுவர் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், ”இந்தியாவிற்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், எந்த பிரச்சனைக்கும் போர் ஒரு தீர்வாகாது. போர் புதிய பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும்.” என கூறியுள்ளார். மேலும் அவர், “நாங்கள் இந்தியாவுடன் ஒரு போதும் போரை தொடங்கமாட்டோம், இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால் போர் வந்தால் உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்” எனவும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே நேற்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது செய்தியாளர்களை சந்தித்த போது, பாகிஸ்தானிடம் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக உள்ளன. பாகிஸ்தானுடன் இந்தியா மோதினால், இந்தியா 22 கூறுகளாக உடையும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.