1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (17:54 IST)

IND-NZ-போட்டியை இரவு கண் விழித்து பார்த்தேன் - Microsoft சி.இ.ஓ சத்ய நாதெல்லா

Sathya Nathellaa
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் அரையிறுதிப் போட்டியை காண இரவு முழுவதும் கண் விழித்திருந்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சி.இ.ஓ சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி  சாஃப்ட்வேட் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனராக உலகின் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் சி.இ.ஓவாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெல்லா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சியாட்டியில் நடைபெற்ற இக்னைட் 2023 டெவலப்பர் மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா கூறியதாவது:

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண நான் இரவு முழுவதும் விழித்திருந்தேன். 5 நிமிடங்களுக்கு முன்புதான் போட்டி முடிந்தது. இந்த மேட்ச் பார்த்துவிட்டுத்தான்  நேராக மாநாட்டிற்கு வந்திருக்கிறேன். இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.