1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (15:28 IST)

திடீரென வந்த மழை.. நிறுத்தப்பட்டது அரையிறுதி போட்டி..!

Rain
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அபாரப் பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை  இழந்தது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. டேவிட் மில்லர் 10 ரன்களும், க்ளாசன் 10 ரன்கள் எடுத்துள்ளனர்

இதையடுத்து  மழை தற்போது சிறிய அளவில் பெய்து வருவதால் மழை நின்றவுடன் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பெரிய மழை பெய்தால் நாளை ரிசர்வ்டு தினத்தில் போட்டி இன்றைக்கு விடப்பட்ட நிலையில் இருந்து தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நாளையும் மழை பெய்து ஆட்டம் தடை பட்டால் என்ன நடக்கும் என்பதை  நடுவர்கள் அறிவிப்பார்கள்.

Edited by Mahendran