மனைவியுடன் சண்டை போட்டதால் ரூ 36 ஆயிரம் அபராதம் கட்டிய கணவர்!

Last Updated: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:45 IST)

மனைவியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணவருக்கு இத்தாலியில் இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் மெல்ல மெல்ல குறைந்த கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஆனால் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியே நடக்க ஆரம்பித்துள்ளார். இப்படியே 8 நாட்கள் நடந்த அவர் மொத்தமாக 650 கிமீ நடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அந்நாட்டு போலிஸார் அந்த நபரைக் கைது செய்து இந்திய மதிப்பில் 36,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :