ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (21:17 IST)

பிரபல இளம் நடிகரின் தாய் மற்றும் படக்குழுவினருக்கு கொரோனா உறுதி !!!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரின் தாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபல இயக்குநர் கரண் ஜோகர். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி கான் நடிகர்களே காத்துக் கொண்டிப்பார்கள். இந்நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் படம் ஜக்ஜக்ஜியோ. இப்படத்தில் வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இவர்களுடம் இணைந்து ரன்பீர் கபூரின் தாய் நீது கபூருன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.

இதன் படப்பிடிப்புகள் சண்டிகரில் நடைபெற்றுவருகிறது.  அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி  நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் கொரொனா சோதனை செய்யப்பட்டது.

இதில் ஹீரோ வருண் தவானுக்குக் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டது.  மேலும், நீதுகபூர், இயக்குநர் ராஜ்மேத்தா ஆகியோருக்கும் இத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  எனவே இப்படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. கியாரா அத்வானி மற்றும் அனில் கபூருக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் ரன்பீர் கபீரின் தாய்க்கு கொரோனா தொற்று என்பதைக் கேள்விப்பட்டதும் விமான ஆம்புலன்ஸில் அவரைம் மும்பைக்கு அழைத்துவந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். தாய்க்கு 61 வயது ஆகும்.