முதலைகள் ஆற்றில் சிக்கிய திமிங்கலம்..! பல நாட்கள் கழித்து கடலுக்கு எஸ்கேப்!
ஆஸ்திரேலியாவில் கடலில் இருந்து வழிதவறி ஆற்றுக்குள் புகுந்த திமிங்கலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கடல்பகுதியில் சுற்றி வந்த ஹம்பேக் திமிங்கலங்களில் மூன்று வழி தவறி ஆஸ்திரேலிய முதலை ஆற்றுக்குள் புகுந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. மூன்று திமிங்கலங்களில் இரண்டு ஆற்றில் சிறிது தூரம் பயணித்த நிலையில் மீண்டும் கடலுக்குள் திரும்பிய நிலையில், ஒரு திமிங்கலம் மட்டும் ஆற்றில் பல கிலோ மீட்டர் தூரம் உள்ளே புகுந்துள்ளது.
கடந்த 17 நாட்களாக ஆற்றுப்பகுதியில் சுற்றி வந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்கு அனுப்ப பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஒருவழியாக தானாகவே கடலுக்கு செல்வதற்கு சரியான பாதையை கண்டறிந்த திமிங்கலம் எந்த ஆபத்துமின்றி கடலுக்குள் சென்று சேர்ந்துள்ளது.
ஒரு திமிங்கலம் வழிதவறி ஆற்றுக்குள் நுழைவது இதுவே முதல்முறை என ஆஸ்திரேலிய விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.