தாயின் சடலத்துக்கருகில் இளம்நடிகை – விசாரணையில் திடுக்கிடும் தகவல் !

Last Modified வியாழன், 16 ஜனவரி 2020 (09:18 IST)
அமெரிக்காவின் பிரபல நடிகையாக இருந்த மோலி பிட்ஸ் தனது தாயைக் கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி பிட்ஸ். நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

கடந்த மாதம் மோலியின் தாய் பெட்ரிஷியா பிட்ஸ் ஜெரால்டு (68) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்துக்கு அருகில் மோலி படுகாயமடைந்து சுய நினைவின்றி கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலிஸார் கொலைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் இப்போது மோலிதான் தனது தாயாரைக் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து மோலியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :