1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (09:15 IST)

அவதார் 2 படத்தோடு இணைக்கப்படும் புஷ்பா 2 டீசர்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இரண்டாம் பாகம் இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. சில மாதங்களாக திரைக்கதை வேலைகள் நடந்து வந்த நிலையில், இந்த மாதம் 7 ஆம் தேதி ஐதராபாத்தில் படத்தின் டீசருக்கான ஷூட் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அந்த படத்தின் இடைவேளையில் புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.