1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:47 IST)

ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிப்பு

ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்ட  நிலையில் தற்போது, உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனம் ரஷ்யா ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும், சர்வதேச ஜூடோ அமைப்பு , ரஷிய அமைப்பு வழங்கிய தலைவர் பதவி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஜூடோ அமைப்பு அறிவித்துள்ளது.