1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:59 IST)

இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கிய இமயமலை பனிப்பாறைகள்!

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் இரு மடங்கு வேகமாக உருகத்தொடங்கி இருக்கின்றன. 

 
உலக வெப்பமயமாதல் காரணத்தால் இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பனிப்பாறைகள் உருகும் நிகழ்வு நடந்துக் கொண்டிருக்கிறது. இமயமலை பாறைகளை பருவநிலை மாற்றம் காலி செய்து வருகிறது. 
 
கடந்த 40 ஆண்டுகளில் இந்த பனிப்பாறைகள், கால் பகுதியை இழந்து விட்டன. பனிப்பாறைகள் உருகுவது சீராக நடைபெற்று வருகிறது. இப்படியே பனிப்பாறைகள் உருகுவது தொடர்ந்தால் ஆசிய நாடுகளுக்கு குடிநீர் கிடைப்பதே கேள்விக்குறியாகிவிடும் என கூறப்படுகிறது.