புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (15:58 IST)

இணையத்தில் வைரலாகும் ஆண் ஒருவரின் ‘pregnancy’ போட்டோ ஷூட்!

சமூகவலைத்தளத்தில் தினம் தினம் பல விசித்திரமான, வித்யாசமான விஷயங்கள் மக்களின் பார்வையை கவர்ந்து வருகிறது.


அந்த வகையில் தற்ப்போது ஆண் ஒருவர் தன் மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில் pregnancy போட்டோ ஷூட்டிற்கு  சம்மதிக்காததால் கொடுத்த பணம் வீணாகி விடக்கூடாது என அவரே தொப்பை காட்டி  ‘pregnancy’ போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டதாக கூறி இந்த புகைப்படங்கள் இணையத்தில் சூப்பர் வைரலாகியுள்ளது.

ஆனால், அது உண்மை அல்ல என ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம்  நண்பர்கள் சேர்ந்து கிண்டலுக்காக எடுக்கப்பட்டதாம்.


தொப்பை வயிற்றை மலர்களால் அலங்காரம் செய்துக்கொண்டு கர்ப்பிணி பெண் போல் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.