1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Murasoli poster viral on facebook

திமுக தலைவரா? டெங்கு தலைவரா? கன்ஃப்யூஸான முரசொலி

முரசொலி
முரசொலி செய்தி தாளில் ”டெங்கு தலைவர் ஸ்டாலின்” என அச்சடித்துள்ளது போல் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகமெங்கும் டெங்கு பரவி வரும் நிலையில் தமிழக அரசை டெங்குவை கட்டுபடுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் முரசொலி செய்தி தாளின் விளம்பர போஸ்டரில் “டெங்கு தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை!” என ஒரு செய்தி அச்சிடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக தவறுதலாக டெங்கு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதா என இருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது ஸ்டாலினை விமர்சிப்பவர்களால் கேலிக்குள்ளாக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்திற்கு ரூ.1580 கோடி: ஜெர்மனி அதிபர் அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியில் தமிழக அரசு