’189’ பேர் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவர் இந்தியரா..?

sumathara
Last Modified திங்கள், 29 அக்டோபர் 2018 (18:53 IST)
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து இன்று காலையில் புறப்பட்ட லயன் ஏர் விமானமானது 189 பயணிகள் மற்றும் 6 பணிப்பெண்கள் 2 விமான ஓட்டிகளுடன் பினாங்க் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கிளம்பிய 13வது நிமிடத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்தது.இதனால் விமான ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
சரியாக காலை 7:20மணிக்கு மேல் பிங்கல் பகுதியில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் இன்னும் வாரததால் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து விமானம் விழ்ந்ததாக கருதப்பட்ட சுமத்ரா கடல் பகுதியில் அதிகாரிகள் விமானத்தை தேடத் தொடங்கினர்.
 
அங்கு விமானத்தின் சிதைந்த பாகங்களும் பயணிகளின் பைகளும் கிடந்துள்ளது.
 
இதில் முக்கியமாக இந்த விமானத்தை இயக்கியது இந்தியர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :