1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (22:05 IST)

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பலி

Philippines
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் 29 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் அதிபர் போங்பாங் மேக்ரோஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, கடந்த கிறிஸ்துமஸ் நாளன்று கனமழை ஏற்பட்டது.  இடைவிடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள நகர்ப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த வெள்ளத்தில் சுமார்  100 க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியதாகவும், பல வீடுகள் வெள்ள  நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இந்த கனமழையால் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த வெள்ளத்தில் இருந்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் பலியானதாகவும், 12 பேரை காணவில்லை என்று  அதிகாரிகக்ள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் படையினர் காணாமல் போன மக்களை தேடி வருகின்றனர்.