முதல்முறையாக கடலில் கலந்தது எரிமலை; பேராபத்தில் பெருங்கடல்
ஹவாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து பசபிக் பெருங்கடலில் கலந்துள்ளதால் பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க தொடங்கியது.
இந்த எரிமலை பசபிக் பெருங்கடல் ஓரத்தில் இருப்பதால் நெருப்பு குழம்புகள் கடலில் கலந்தது. எரிமலை வெடித்து கடலில் கலப்பது இதுவே முதல்முறையாகும். இது கடல் பகுதியை மொத்தமாக மாசுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நெருப்பு குழம்புப்கள் கடலில் கலந்ததால் நீராவி படலம் உருவாகி உள்ளது. இந்த நீராவி படலத்தில் மோசமாக வாயுக்கள் இருப்பதாகவும், இதனால் பெரிய அளவில் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.