1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (15:43 IST)

பாலியல் வன் கொடுமை: மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு

mic tyson
பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக ஒரு பெண் பாலியல் வன் கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை உலக சேம்பியனாக வலம் வந்தார்.

இவர் களத்தில் எதிர் வீரரின் காதைக் கடித்தது, மனைவியுடனான விவாகரத்து,. உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தொழில்முறை குத்துச்சண்டையில் பின்னடைவை சந்தித்தார்.

போட்டியில் வெற்றி பெற்று சம்பாதித்த பணத்தையும் இழந்து, வழக்குச் செலவுக்க்காக கடனாளியாக மாறினார்.

இந்த நிலையில், சமீபத்தில், விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்திலும் மைக் டைசன் நடித்திருந்தார்.

இந்த நிலையில்,32 ஆண்டுகளுக்கு முன், 1991 ஆம் ஆண்டு   தன்னை டைசன், சொகுசு காரில் வைத்து,  முத்தமிட்டதாகவும், இதை தான் மறுத்த போதிலும்,  பாலியல் வன் கொடுமை செய்ததாக ஒரு பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மைக் டைசன் ரூ.40.82 கோடி  நஷ்ட ஈடு தர வேண்டுமெனவும், இதனால், தான் மனதளவில் உடலளவில் பாதிக்கப்பட்டதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.