திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (17:19 IST)

பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்கப் பெண் முதலிடம்!

usa
2023 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆர் போனி கப்ரியேல் கைப்பற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான 71 வது பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்க நாட்டின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்தது.

இதில்,  பல நாடுகளைச் சேர்ந்த 86 க்கும் மேற்பட்ட பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இபபோட்டியில் அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல்  பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

2 வது இடத்தை டயானா சில்வாவும், 3 வது இடத்தை அமி பெனாவும் கைப்பற்றினர்.
இந்தியா சார்பில் போட்டியிட்ட திவிதா சோன் சிரியா 16 வது இடத்தைப் பிடித்துள்ளார்.