ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (18:06 IST)

மடகாஸ்கர் அருகே படகு கவிழ்ந்து விபத்து...22 அதிகரிகள் உயிரிழப்பு

matakashkar
மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 அகதிகர் உயிரிழந்தனர்.

மடகாஸ்கரில் இருந்து பிரரான்ஸ் நாட்டிலுள்ள தீவான மாயோட்டிற்குச் செல்லும் வழியில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 22 அகதிகள் உயிரிழந்தனர்.

இந்தப் படகில் 47 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், மடகாஸ்கர் வடக்கே அங்கொம்பொரோன என்ற கடல் பகுதியில் செல்லும்போது, கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு 1 மணியளவில் அம்பிலோப் அங்கொம்பொரோனாவில் மீனவர்கள் இந்த படகு விபத்தைக் கண்டுபிடித்து, இதுகுறித்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், 23 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 22 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.