வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (18:35 IST)

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டத்தின் காரணமாக திராங்கில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில்,  இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் திராங் என்ற பகுதியில், இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தபோது, மாண்டாலா மலைப்பகுதியில் திடீரென்று விபத்தில் சிக்கியது.

தற்போது, ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, உயரதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் பயணம் செய்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தன் குடும்பத்தினருடன், சூலூரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் விக்கியது குறிப்பிடத்தக்கது.