திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (19:54 IST)

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!

venisula
வெனிசுலா  நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் உள்ளது.
 
இங்கு, தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தங்கச் சுரங்கத்தின் ஒருபாதி திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இவ்விபத்தில் பல தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணில் புதைந்துள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
 
இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், இன்னும் சில சுரங்கலில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
ஆனால், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை வெனிசுலா  நாட்டு அரசு அதிகார்பூர்வமாக அறிவிக்கைவில்லை.