திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (20:16 IST)

பொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்ட சிறுமி

மேற்கு வங்கத்தில் சிறுமி பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தனது தாயை சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 
மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் பகுதியைச் சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்துள்ளார். அதை அவர் அவரது குழந்தையிடம் பொம்மை துப்பாக்கி என நினைத்து கொடுத்துள்ளார்.
 
சிறுமி அந்த துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்த போது தனது தாயை சுட்டுள்ளார். அதிலிருந்த தோட்டா தாயின் உடலில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காகோலி ஜனாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடப்பதுதான் வழக்கம்.