திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (15:52 IST)

மிதக்கும் பேய் கப்பல்: என்னவாக இருக்கும்?

மியான்மர் கடற்பகுதியில் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டுள்ளனர். 
 
மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் காணப்பட்ட இந்த கப்பல் குறித்து போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் அந்த கப்பல் குறித்த ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று தேடி வருகின்றனர்.
 
கப்பலில் மாலுமிகளோ அல்லது பொருட்களோ ஏதுமில்லை என்று யங்கூன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாம் ரடுலங்கி PB 1600 என்று பெயர் எழுதப்பட்டிருந்த அக்கப்பல் இந்த வார தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த கப்பல் குறித்த எந்தவொரு செய்திகளும் துப்புகளும் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் இதனை பேய் கப்பல் என குறிப்பிட்டு வருகின்றனர்.