செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2019 (20:46 IST)

பேயாக மாறிய பூனை..வைரல் வீடியோ

பூனை ஒன்றுக்கு பேய் போல் உடையணிவித்து டிக்டாக் செய்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பூனை, நாய், கிளி, ஆகிய செல்லப்பிராணிகளை வைத்து பல நகைச்சுவையான வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன. இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தஸ்டிடுல் ரோகோம் என்பவர் தனடு செல்லப்பிராணியான பூனைக்கு "NUN" என்ற ஆங்கில திரைப்படத்தில் வரும் பேய் போல் உடையணிவித்து டிக்டாக் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். பின்பு அந்த வீடியோ பின்னணியில் பேய் படங்களில் வருவது போன்ற இசையையும் இணைத்துள்ளார்.

பின்னணி இசையுடன் அந்த பூனையை பார்ப்பதற்கு பேய் போல் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ வேடிக்கைக்காக பலர் பகிர்ந்து வருவதால் வைரல் வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது.