வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (09:53 IST)

கொரோனாவால் பொருளாதாரம் சரியும்! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட நிதி அமைச்சர்

கொரோனா பாதிப்புகளால் பொருளாதாரம் சரிவதாக விரக்தியில் இருந்த ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் ஜெர்மனியில் இதுவரை கொரோனா வைரஸால் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 541 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வைரஸ் பிரச்சினைகளில் இருந்து மீண்டாலும் ஜெர்மன் பொருளாதார பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸெ மாகாணத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஷஃபர் நிதிநிலை நெருக்கடிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பொருளாதார நெருக்கடிகள் குறித்து தீவிரமாக யோசித்து வந்ததால் அவர் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஜெர்மனியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.