1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (08:46 IST)

விஜய்யைத் திருமணம் செய்ய ஆசை- மண்டை உடைந்த நடிகை!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் செந்தில்குமாரி நடிகர் விஜய்யை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் செந்தில்குமார். விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் விஜய்யைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில்’ என்னுடைய திருமணத்துக்குப் பின்னர்தான் நான் நடிக்க வந்தேன். எனக்கு நடிகர் விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என ஆசை. அவரை பார்க்கவேண்டும் என்பதற்காக திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பின் போது சென்றேன். ஆனால் என்னை என் கணவர் தடுத்தார். மேலும் அவர் என்னைத் தள்ளிவிட்டதில் என் மண்டை உடைந்தது. ஆனாலும் நான் விஜய்யைப் பார்க்க அப்போது சென்றேன்’ எனக் கூறியுள்ளார்.