புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (21:47 IST)

இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: காயத்ரி ரகுராம்

gayathri
இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது என நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்
 
திமுக அறிவிக்கும் திட்டம் எல்லாமே மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்கள் என்றும் அந்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர் 
 
அந்த வகையில் சற்றுமுன் நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் இது குறித்து கூறியிருப்பதாவது
 
இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் வார்த்தைகளால் மட்டுமே உருட்ட முடியும், செயலில் அல்ல.  மோடி பிரதமரால் மட்டுமே நம் நாட்டுக்கும் மக்களுக்கும் எல்லா வளர்ச்சி சாத்தியமாக்க முடியும்