ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

ops eps
தமிழகத்தில் காலியாக இருக்குமாறு மாநிலங்களவை எம்பி தேர்தலில் 3 திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பதும் ஒரு எம்பி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அதிமுகவுக்கு 2 எம்பிகள் கிடைக்கும் நிலையில் விரைவில் அக்கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக தற்போது இரண்டு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிமுகவின் வேட்பாளர் பெயர்களை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிவித்தனர் 
 
மாநிலங்களவை தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது